கண்டியில் சீ.சீ.டி.வி காணொளிகள்

கண்டி நிர்வாக மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கு சீ.சீ.டி.வி காணொளிகள் அவதானிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சீ.சீ.டி.வி காணொளிகளை அவதானிப்பதற்கு சிறப்பு குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவதானிக்கப்பட்ட காணொளிகளினூடாக சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சேதமாக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றவர்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

 

0
Shares