சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார வெளியிட்டுள்ள தகவல்

ஜப்பானிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதன் பின்னரே அவசரகால நிலை நீக்கம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கண்டியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து கடந்த 06ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் அவசரகால நிலை நீக்கம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமைக்கு பின்னர் மீண்டும் அவசரகால நிலையை நீடிக்க வேண்டிய அவசியம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னரே இதுதொடர்பில் தீர்மானிக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

0
Shares