சமூக வலைத்தளங்களின் உரிமை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் உரிமை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு, தாம் அரசாங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளர்.

ஜப்பானிற்கு விஜயம் செய்துள்ள அவர், அங்குள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போது இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் நல்ல நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் சிலர் அதனை நாட்டை சீரழிக்கும் வகையில் பயன்படுத்துகின்றனர்.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும், இனமுறுகலை ஏற்படுத்தும் வகையான பதிவுகளை நீக்குவதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

 

0
Shares