சிந்திப்பதை நிறுத்தினார் ஸ்டீபன் ஹாக்கிங்..!

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவராக விளங்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தமது 76வது வயதில் இன்று புதன்கிழமை அமெரிக்காவில் காலமானார்.

” நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். இந்த பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம் இது… மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது… நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன்… அதன் மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன் ” என உறுதிப் பட கூறுகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்!

“வாழ்க்கை கடினம்தான்; ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!”

என்ற இவரது வார்த்தைகள் இன்று வரையில் மறையாதுள்ளது. இளம் வயதில் மோட்டார் நியூரான் நோய் தாக்கி தன் உடலின் செயல்பாட்டை இழந்தார். இருந்தபோதும், அறிவியல் மேல் அவருக்கிருந்த காதல் கொஞ்சமும் குறையவில்லை.பிரபஞ்சம் குறித்தும், பிரபஞ்ச கருங்குழி குறித்தும் ஆய்வு மேற்கொண்ட இவர் பின்னர் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0
Shares