அவசரகாலநிலை நீடிக்குமா?

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலநிலையை இரத்து செய்வது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 18ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து கடந்த 06ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் அவசரகால நிலை நீக்கம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜப்பானிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி நாடு திரும்பும் வரை, நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலநிலை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 06ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட அவசரகாலநிலை இன்றைய தினம் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

0
Shares