ஆன்மிக பேச்சளார் வசந்தா வைத்தியநாதன் அம்மையார் இறையடி சேர்ந்தார்

கலாபூஷணம் திருமதி. வசந்தா வைத்தியநாதன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை இறையடி சேர்ந்தார்.

அவர்  இறையடி சேரும் போது அவருக்கு 80 வயதாகும்.

இறுதிக்கிரியைகள் பொரள்ளை இந்து மயானத்தில் நாளை இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமதி. வசந்தா வைத்தியநாதன் அம்மையார், இலங்கையில் மிக நீண்ட காலமாக ஆன்மீக சேவையாற்றிய ஆன்மீகவாதியாகவும் சமய சொற்பொழிவாளராகவும் நேரடி வர்ணனையாளராகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

0
Shares