பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த வாரம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.

இதன்போதே இதுதொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு பொது எதிரணி தீர்மானித்திருந்தாலும், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், எதிர்வரும் வாரம் இந்த பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், அந்த பிரேரணையில் கையெழுத்திடுவதற்குரிய நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

0
Shares