உலர் திராட்சையில் இருக்கும் ஆரோக்கியமான குணங்கள்

உலர் திராட்சையில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளன. காலையில் நீருடன் ஒரு டம்ளர் நீரில் 10 உலர் திராட்சைகளை ஊற வைத்து உண்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும்.

பாலில் உலர் திராட்சைகளை இட்டு, காய்ச்சி குடித்தால் இதயத் துடிப்பு சீராகும்.ஆண்கள் விறைப்புத் தன்மை குறைப்பாட்டில் அவதிப்பட்டால், நாள்தோறும் உலர் திராட்சைகளை ஒரு கையளவு உட்கொள்ள வேண்டும்.

எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் உலர் திராட்சை அதிகம் உள்ளது. உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் குணமாக, உலர் திராட்சைகள் உதவுகின்றன.

உடல் வெப்பம் தணிவதற்கும் உலர் திராட்சை பெரிதும் பயன்படுகிறது. பாலில் உலர் திராட்சைகளை இட்டு, காய்ச்சி குடித்தால் இதயத் துடிப்பு சீராகும்.

0
Shares