எதிர்வரும் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் தொண்டராசியர்கள் நியமனத்திற்கான நேர்முகப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

வடமாகாண தொண்டராசியர்கள் நியமனத்திற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் இதனை  தெரிவித்தார்.

கடந்த கால நேர்முகத் தேர்வின் போது, பதிவுத் திரட்டுப் புத்தகத்தில் உள்வாங்கப்படாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டவர்கள் மாத்திரமே இதில் பங்கேற்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த நேர்முகப்பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் தங்களை அத்தாட்சிப் படுத்துவதற்கான சத்தியக் கடதாசி ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

0
Shares