70 ஆவது உலக சுகாதார தின வைபவம் நாளை கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் இடம்பெறவுள்ளது

உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 70 ஆவது உலக சுகாதார தின வைபவம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கையில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு தாமரைத்தடாக அரங்கில் நாளை காலை இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்ககேற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமும், தெற்கு மற்றும் கிழக்காசி நாடுகளுக்கான பணிப்பாளரும், 12 நாடுகளின் சுகாதார அமைச்சர்களும் நாளைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, இலங்கை சுகாதாரத் துறையில் இடம்பெற்ற 70 வருட முன்னேற்றங்கள் தொடர்பான பிரசுரங்கள் வெளியிடப்படவுள்ளன.

மேலும், இதன்போது சிறப்பு முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 

0
Shares