மே மாதம் 7ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டத்தில் மாற்றங்கள் தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறையில் குறைப்பாடுகள் இருக்குமாயின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக நாடாளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவுள்ள மே மாதம் 7ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விரைவிலேயே முழு அமைச்சரவை மாற்றமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, குறித்த செயற்பாடுகளுக்காக இரு தரப்பு குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

0
Shares