April 12, 2018
பாகுபலி பிரபாஸ்-க்கும் விஜய் சேதுபதியுடன் நடித்த நடிகை நிஹாரிகாவை திருமணம் செய்கிறார்!
விஜய் சேதுபதியுடன் நடித்த நடிகை நிஹாரிகாவை, நடிகர் பிரபாஸ் மணக்கப் போவதாக வெளியான தகவல் குறித்து நடிகர் சிரஞ்சீவி விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகத்தின் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். ‘பாகுபலி’ படத்தில் நடித்த பிறகு அவர், இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். ‘பாகுபலி’ படம் எந்தளவுக்கு அவருக்கு புகழை தேடித் தந்ததோ, அதே அளவுக்கு அவருக்கு சங்கடத்தையும் தந்தது. ‘பாகுபலி’ படத்தின் போது தான் பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணத்துக்கு தயராகி வருவதாகவும் கிசு கிசு கிளம்பியது. ஆனால், இருவருமே அதை மறுத்தனர். ஆனாலும், காதல் கிசு கிசு அடங்கியபாடில்லை!
இந்நிலையில், நடிகர் பிரபாஸுக்கும், தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் உறவுக்கார பெண்ணும், விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் நாயகியுமான நிஹாரிகாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், ‘இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை!’ என சிரஞ்சீவி குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நடிகர் சிரஞ்சீவி கூறும் போது; நிஹாரிகா, அவரது அடுத்தடுத்த படங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவருக்கு திருமணம் செய்து வைப்பது குறித்து தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை!” என்று கூறியிருக்கிறார்.
Voice of Asia Network (Pvt) Ltd
© 2017 Varnam FM. All Rights Reserved