ஆசிய பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை பெண்கள் கபடி அணி

முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை பெண்கள் கபடி அணிக்கு வீராங்கனைகளை தெரிவுசெய்வததற்கான போட்டி நாளை நடைபெறவவுள்ளது.
டொரின்டனில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் மைதானத்தில் இந்த தெரிவு போட்டி இடம்பெறவுள்ளது.

இலங்கை கபடி சம்மேளனத்தில் பதிவுசெய்துள்ள விளையாட்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட நாட்டில் எந்தவொரு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீராங்கனைகள் இதில் பங்கேற்கமுடியும்.

போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகள் நாளை காலை 7 மணிக்கு முன்னதாக டொரிங்கடன் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் மைதானத்துக்கு சமூகமளிக்குமாறும் இலங்கை கபடி சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.

முதலாவது ஆசிய பெண்கள் கபடி போட்டி எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை மலேசியாவின்  கோலாலம்பூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

0
Shares