ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம்பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம்பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

லண்டனிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதிக்கு நேற்றைய தினம் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பொதுவான எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் நேற்றைய தினம் ஆரம்பமான குறித்த மாநாட்டில் ஜனாதிபதி நேற்றைய தினம் பங்கேற்றிருந்தார்.

சுபீட்சம்இ நீதிஇ நிலைபேற்றுத்தன்மை என்பன தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் உரையாற்றவூள்ள நிலையிலேயேஇ ஜனாதிபதி நாளை மறுதினம் உரையாற்றவூள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவூ தெரிவித்துள்ளது.

மேலும்இ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாநாட்டின் இடைநடுவில் பிரித்தானிய பிரதமர்இ இந்திய பிரதமர் உள்ளிட்ட சில முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசவூள்ளதாகவூம் கூறப்படுகின்றது.

அத்துடன்இ பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் நிகழ்வூ ஒன்றிலும்இ பிரித்தானிய மாகாராணி எலிபபெத்தின் 92ஆவது பிறந்ததின நிகழ்வூகளில் ஜனாதிபதி பங்கேற்கவூள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளைஇ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று லண்டன் வாழ் இலங்கையர்களை சந்திக்கவூள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற புதுவருட சுப நேரங்களுள் ஒன்றான தலைக்கு எண்ணெய் தோய்க்கும் நிகழ்விலும் நேற்று ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.(SM)

0
Shares