தயாரிப்பாளரை மிரள வைத்த நடிகை

இசையமைப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய பாடகி நடிகை, தன்னை பெரிய நடிகை என்று நினைத்துக் கொள்கிறாராம். அழகு இருக்கிறது, திறமை இருக்கிறது என்று அடிக்கடி தன்னைத் தானே புகழ்ந்துக் கொள்கிறாராம். சமீபத்தில் நடிகையை தயாரிப்பாளர் ஒருவர் அணுகி இருக்கிறாராம்.

நான் தயாரிக்கும் புதிய படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு கதை கேட்கிறேன் என்று தயாரிப்பாளரை இரண்டு வாரமாக அலைய வைத்திருக்கிறாராம். மேலும் கதை கேட்பதற்கு முன்பே என்னுடைய சம்பளம் 80 லட்சம், அதற்கு சரி என்றால் கதை சொல்ல வாருங்கள் என்று கூறியிருக்கிறாராம்.

இதைக்கேட்ட தயாரிப்பாளர் நடிகைக்கு பெரிய சொல்லும் அளவிற்கு எந்தப் படமும் வரவில்லையாம். அதற்குள் இப்படி நடந்துக் கொள்கிறாரே என்று மிரண்டு போய், கதை சொல்லமலே சென்றிருக்கிறாராம்.

0
Shares