கருவளையம் நீங்க இதை செய்து பாருங்கள்

முகத்தின் அழகு குறைந்து தெரிய கருவளையங்களும் ஒரு காரணம். களைப்பு,தூக்கமின்மை,உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது,நீண்ட நேரம் கொம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பல செயல்கள் கருவளையம் ஏற்பட காரணமாகிறது.

இதனை போக்க சில இயற்கை வழிமுறைகள் உள்ளன.அதனை தெரிந்து கொண்டு கண்கள் புத்துணர்ச்சியுடனும்,பொலிவோடும் இருக்க முயற்சிக்கலாமே !

தக்காளி :
பாதி தக்காளியை அரைத்து அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது பயத்தம் பருப்பு மா சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கண்களை சுற்றி தடவி ஊற வைத்து கழுவினால் கருவளையங்கள் மறையும்.

ஜாதிக்காய் :
ஜாதிக்காய் பொடியை பேஸ்ட் செய்து இரவில் தூங்கும் போது கண்களை சுற்றி தடவி ஊற வைத்தால்,அதில் உள்ள வைட்டமின் ‘ஈ’ சத்தினால் கருவளையங்கள் நீங்கும்.

பாதாம் :
பாதாமை போடி செய்து அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கண்களை சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

எலுமிச்சை :
1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன்,1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 1 டீஸ்பூன் மைசூர் பருப்பு மா சேர்த்து கண்களைச் சுற்றி தடவி 15 ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மஞ்சள்தூள் :
2 டீஸ்பூன் மஞ்சள் தூளில் சிறிது கரும்புச்சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து 5 நிமிடம் ஊற வைத்து பின் கண்களைச் சுற்றி தடவி 10 – 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

புதினா :
புதினா இலைகளை அரைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கண்களை சுற்றி தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.இதன் மூலமும் கருவளையங்கள் நீங்கும்.

0
Shares