நம் காதல் கொஞ்சம் குளிர் காய வேண்டுமாம்.

நான் சுவைத்ததிலேயே
மிக அதிக இனிப்புசுவை கொண்டது
உன் இதழ்கள்தான்.
அதுசரி.. நீ உன் இதழ்களில்
லிப்ஸ்டிக் பூசுகிறாயா?
சர்க்கரை பூசுகிறாயா?

உன் விரல்களை
தொட்டு விளையாடும்
என் விரல்களைவிட,
உன் விழிகளை தொடாமல்
தொட்டு விளையாடும்
என் விழிகளுக்கே இன்பம் அதிகம்

உன் பெட்ரோல் விரலும்
என் தீக்குச்சி விரலும்
எதற்கு தனித்தனியே இருக்க வேண்டும்?
நம் காதல் கொஞ்சம்
குளிர் காய வேண்டுமாம்.
அருகே வா..

ஏழுகடல் தாண்டி யாரும்
கண்டுபிடித்து விட முடியாதபடிதான்
என் இதயத்தை ஒளித்து வைத்திருந்தேன்.
எப்படி அத்தனை ஆழத்தில் இருந்த
என் இதயத்தை சிறைப்பிடித்தாய்
உன் விழி தூண்டிலால்?

எதாவது தவறு செய்துவிட்டு
என்னை சமாதானப்படுத்தும்
அழகிற்காகவாவது
அடிக்கடி தவறு செய்.

0
Shares