பஸ் உரிமையாளர்கள் பணி நிறுத்தம் நாளை முதல்

நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அனைத்து மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

20 சதவீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குறைந்தபட்ச கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் 6.56% ஆல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிப்பு செய்யாதிருப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அனைத்து மாகாண பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

0
Shares