சிகரட் தொகையுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபரொருவர் இன்று  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, பொரலஸ்கமுவ பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்த 15,400 சிகரட்கள் உள்ளடங்கிய 77 பொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைப்பற்ப்பட்ட சிகரட்கள் 770,000 பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0
Shares