கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராயின் ஆடையின் சிறப்பம்சம்…!!

 

உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா 17 ஆவது முறையாக இந்த ஆண்டு பிரான்சில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதில் உலகின் புகழ் பெற்ற பல நடிகர், நடிகைகளின் சிவப்பு கம்பள வரவேற்பானது தனிச்சிறப்புமிக்கது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழாவில் உலகின் பிரபல்யமான நடிகர், நடிகைகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து வலம்வந்து அசத்துவார்கள்.

அந்தவகையில், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த வருடம் அணிந்து வந்த நீல நிற ஆடை அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.. !!

மைக்கேல் சின்கோ என்னும் ஆடை வடிவமைப்பாளரால் பட்டு நூல்களால் முழுமையான கைவேலைப்பாடுகளுடன், 10 அடி நீளத்தில், சுமார் 125 நாட்களில், பட்டாம்பூச்சி வடிவத்தில், எம்பிராய்டரி செய்யப்பட்டு மிகவும் நேர்த்தியாக இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாக உள்ளது.

 

 

 

0
Shares