ஆஸ்தி்ரேலியா அணியின் தேர்வாளர் குழுவில் இருந்து விலகுகிறார் மார்க் வாக்!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக இருந்து மார்க் வாக் தனது பதவியை நீட்டிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

 

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாக். 52 வயதாகும் இவர் கடந்த 20014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தேசிய அணியின் தேர்வுக்குழுவில் இடம்பிடித்தார். இவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. அதன்பின் தனது பதவியை நீட்டிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது பதவியை நீட்டிக்க மார்க் வாக் விரும்பவில்லை. BOX SPORTS  TV யில் வர்ணனையாளராக பணிபுரிய சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார். மார்க் வாக் ஆஸ்திரேலியா அணிக்காக 128 டெஸ்ட், 244 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

0
Shares