உலகத் தமிழர் மாநாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்

கம்போடியாவில் நடைபெறவுள்ள உலகத் தமிழர் மாநாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த மாநாடு எதிர்வரும் 19ம் மற்றும் 20ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

குறித்த மாநாட்டை இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணனும், தமிழக அமைச்சர் மா.பா. பாண்டியராஜனும் ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

பண்ணாட்டு தமிழ்ச்சங்கக் கூட்டமைப்புத் தலைவர் மரு.க. திருதணிகாசலம், தென்புலத்தார் அமைப்பின் நிறுவனர் ஓரிசா பாலு சீனிவாசராவ், தென்கிழக்காசியத் தமிழ் சங்க விசாகன் மைலாசலம் கம்போடிய தமிழர் பேரவை முத்தையா ராமசாமி ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0
Shares