புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஹீஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடே இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்றைய தினம் தலைப்பிறை தென்பட்டால் நாளைய தினம் முதலாவது நோன்பு ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
Shares