தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா?

தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் நாளை நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தில் இருந்து விலகிய அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திமவீரக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை இரவு 7 மணியளவில் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையிலேயே இதன்போது குறித்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திமவீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கட்சியின் பதவி நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது சிறப்பு செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0
Shares