இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

பேருந்து கட்டணத்தை 6.56 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று காலை அமைச்சரவையில் தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே பேருந்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

எனினும், குறைந்த பட்ச கட்டணமான 10 ரூபா பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் நாடாளவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எதிர்பார்த்த பேருந்து கட்டண சீர்திருத்திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் 15 முதல் 20 சதவீத பேருந்து கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த சங்கம் இதற்கு முன்னர் கோரியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

0
Shares