உளவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றி வரும் விஜய் அன்டனி

வெற்றிகரமான நடிகராக வலம் வரும் விஜய் அன்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘காளி’. இந்த படத்தைப் பற்றி இயக்குனர் கிருத்திகா உதயநிதியிடம் கேட்டபோது,

”வெளிநாட்டில் உளவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றி வரும் விஜய் அன்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது.அதை பற்றி தன் தாயிடம் விவரித்து கூறிவிட்டு,இந்தியாவிற்கு வருகிறார்.
இங்கு தன்னுடைய சிறு வயதில் ஏற்பட்ட விடயங்களை அவர் எப்படி கண்டறிகிறார்? தன்னுடைய கனவுகளுக்கான காரணத்தை கண்டுபிடித்து மீண்டும் அந்த கனவிலிருந்து விடுபடுகிறாரா?தன்னுடைய வாழ்வில் குறுக்கிட்ட பெண்களுக்கு என்ன பதிலளிக்கிறார்? இது தான் காளி பாடத்தின் திரைக்கதை”

இதில் விஜய் அன்டனி உளவியல் மருத்துவராகவும், மற்றொரு கேரக்டரிலும் நடிக்கிறார்.அந்த கேரக்டரைத் திரையில் கண்டு ரசிக்கவும்.விஜய் அன்டனிக்கு ஜோடியாக சுனைனா,அஞ்சலி ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்த படத்தில் ஷில்பா மஞ்சுநாத்,அம்ரிதா ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0
Shares