நடிகைகளின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன் – கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வேடத்தில் தோன்றி நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் இந்த திரைப்படம் மகாநதி எனும் பெயரில் வெளிவந்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்றைய தினம் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.அங்கு தேவஸ்தான நிர்வாகிகள் அவருக்கு லட்டு பிரசாதங்களை வழங்கினர். தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- “நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான ‘நடிகையர் திலகம்’ எனும் தமிழ் திரைப்படத்திலும், மகாநதி என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்தது அதிர்ஷ்டமாகவும் பெருமையாகவும் உள்ளது.”

மேலும் ” இந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் திரைப்படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இனி இது போன்ற சுயசரிதை படங்களில் நடிக்க மாட்டேன்” என்றார்.

கீர்த்தி சுரேஷை பார்ப்பதற்காக கோவில் அருகே ரசிகர்கள் கூட்டமாக சூழ்ந்து நின்றனர். அதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது .உடனே பொலிஸார்  அவர்களை கட்டுப்படுத்தி கீர்த்தி சுரேஷை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

0
Shares