ஓரினச்சேர்க்கை வழக்கில் பிரதமருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு !

மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிமுக்கு ஓரின சேர்க்கை மற்றும் ஊழல் வழக்கு காரணமாக கடந்த 1998-ம் வருடம் சிறைத்தண்டனை பெற்றார்.

தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அன்வர் மறுத்ததோடு அவருடைய ஆதரவாளர்களும் அதை எதிர்த்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் நடந்த மலேசிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்து, அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் பி.எச் கட்சி கூட்டணி வெற்றியீட்டியது

எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதையடுத்தது 92 வயதான மகாதீர் முகமது பிரதமரானார்.மேலும் எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த அன்வரை விடுதலை செய்ய வேண்டுமென மலேசிய மன்னரிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற மன்னர் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

அன்வருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விடுதலை செய்யப்பட்டதும் வைத்தியசாலையிலிருந்தே அரண்மனைக்கு சென்றார்.

0
Shares