நீர் கட்டணமும் அதிகரிக்கப்படுமா?

நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பிலான யோசனை ஒன்று இந்த வாரம் கூடவுள்ள பொருளாதார முகாமைத்துவ குழுவில் முன்வைக்கப்படவுள்ளது.
நீர்வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பரிந்துரைக்கு அமைய இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக நீர்வழங்கள் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சின் செயலாளர் வசந்த ஹப்புஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நீர்க்கட்டணத்தில் திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நீரை சுத்திகரித்து விநியோகிக்கும் நடவடிக்கைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் நீர் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார முகாமைத்துவ குழுவில் முன்ரவக்கப்படும் யோசனைக்கு அமைய நீர்க்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் வசந்த ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படாமையினால் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பாரிய நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் நீர் வழங்கள் தொழிற்சங்கம் குறிப்பட்டுள்ளது.

0
Shares