கிளிநொச்சியில் நீர் வழங்கும் திட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் நீர் விநியோக திட்டத்தின் மூலம் அங்கு வாழும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இந்த நீர் விநியோக திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொள்முதல் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக 608.49 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

இரண்டு தனியார் நிறுவனங்கள் இதனை கூட்டு திட்டமிடலின் கீழ் வழங்குவதற்கு நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares