என்னவள்

 

உந்தன் அழகெல்லாம்
வாசனை திரவியமாய்
மாறி உன்னுள் இறங்கி
நீ விடும் சுவாசத்தில்
கலந்து வந்து வஞ்சியே
உன்னை வாச மலராய்
மாற்றிட, உன்னழகைப்
பருகவந்த கரு வண்டாய்
என்னை மாற்றிய மாயம்
அதுவே நம் காதலின்
ரகசியம் என்பேன் நான்
மாயம் செய்தவன் அந்த
மன்மதனே என்பேன் நான்
நீ என்ன நினைக்கிறாய்
சொல்வாயோ என் காதல் கிளியே.

0
Shares