எரிபொருள் விநியோகத்தில் மோசடி

எரிபொருள் விலை அதிகரித்த தினத்தில் இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய வளங்கள் அபவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருளின் விலை கடந்த 10ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக அரசாங்கத்தினால் அன்றைய தினம் அறிவித்தல் விடுக்கப்பட்டது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவித்தல் கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து அன்றைய தினம் நள்ளிரவு விலை அமுலுக்கு வரும் வரையிலான காலப்பகுதியில்,

எரிபொருள் விநியோகம் மற்றும் அதற்கான விநியோக கேள்வி தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைந்த விலையில் எரிபொருளை வாங்கி கூடிய விலையில் விற்பனை செய்வதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கடந்த 10ஆம் திகதி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலைகளில் இருந்து, 74 எரிபொருள் கொள்கலன்களில்; எரிபொருளை நிரப்பி, விநியோகித்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளாதாக அவர் கூறியுள்ளார்.

விதிமுறைகளை மீறி, ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதுடன், மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

0
Shares