கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகு விபத்து

இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்த விபத்தின்போது, 17 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கி நேற்று முன்தினம் மாலை, திருமண வீட்டார் உட்பட 40 பேர் பயணம் செய்த படகே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

கோதாவரி ஆற்றில் படகு சென்று கொண்டிருந்த போது கடும் மழையுடன் வீசிய காற்று காரணமாக குறித்த படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் காணாமல் போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 

0
Shares