சாமி 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியீடு !

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம் – திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சாமி. இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் சாமி ஸ்கொயர் என்ற பெயரில் உருவாகி வருகின்றது.கிட்டத்தட்ட 80 சதவீதம் இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அண்மையில் இதன் இறுதி கட்ட படப்படிப்புகள் காரைக்குடியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.மேலும்,இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர்.மேலும் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனா்.

இன்று, 17-ஆம் திகதி மாலை 6 மணிக்கு இதன் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது.இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.எதிா்வரும் அக்டோபா் மாதம் இத்திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0
Shares