தென் மாகாணத்தில் வைரஸ் காய்ச்சல்

 

தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் காணப்படுகின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விசேட வைத்தியர்கள் குழு மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறு பிள்ளைகளை நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் காணப்படுமாயின் நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவுறுத்தியுள்ளார்.

 

 

0
Shares