கோலமாவு கோகிலா படத்தின் “கல்யாண வயசு” பாடல் பாடும் அனிருத் – ப்ரோமோ வீடியோ உள்ளே !

அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் ரெடியாகியுள்ள படம் கோலமாவு கோகிலா. இது டார்க் திரில்லர் ஜானர் படமாம். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு,நிர்மல் எடிட்டர்.

ஏற்கனவே முதல் சிங்கிள் பாடல் வெளியான நிலையில் ,இன்று காலை 10.30 மணிக்கு சிவகார்த்திகேயன் எழுதியுள்ள “கல்யாண வயசு” என்ற பாடலின் வீடியோ பதிப்பு வெளியாகிறது. முன்னரே யோகி பாபு நயன்தாராவை ப்ரொபோஸ் செய்யும் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நேற்று அனிருத் இப்பாடலின் ரெகார்டிங் சமயத்தில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‪#KalyaanaVayasu full song video on YouTube tomo 🥁‬ ‪10:30 am 👈🏻‬ ‪#KolamaavuKokila ‬

A post shared by Anirudh (@anirudhofficial) on

0
Shares