வானம்

நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே
தரிசிக்க முடிகிறது!
ஒரேயரு முறை
கொஞ்சம் உன் தலையை
நிமிர்த்தி வெட்கப்படேன்…
வெகுநாட்களாய் உன்
வெட்கத்தைத் தரிசிக்கத்
துடிக்கிறது வானம்!

 

0
Shares