மர்மமான முறையில் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

மாளிகாவத்த – ஹிஜ்ரா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் மர்மமான முறையில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

குழந்தையை வளர்த்து வந்த தாய் மற்றும் தந்தை ஆகியோரே எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

0
Shares