உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த வான் கதவுகள் நேற்று இரவு திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கலாவெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது.

வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதியில், தாழ் நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்போது நிலவும கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

0
Shares