தகவல் திருட்டு தொடர்பில் விளக்கமளிக்கிறார் பேஸ்புக் நிறுவனர்

பேஸ்புக் பயனாளர்களின் தகவல் திருட்டு சம்பவம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெக் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் அந்தோனியா டஜானி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் நிறுவனம் பேஸ்புக் பாயனாளர்களின் தகவல்களை திருடியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை ஏற்பதாகவும் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் தெரிவித்திருந்தது.

இவ்வாறு தகவல் திருடப்பட்டமை உண்மை என ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெக் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியிருந்தார்.
இதேவேளை, குறித்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு அவர்; விளக்கமளிக்கவுள்ளார்.

 

0
Shares