பாடசாலை மாணவர்களின் கொடூர செயல்

மொனராகலை சியம்பலாண்டுவை பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 11இல் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களுக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

அதில் ஒரு மாணவன் கூரியு ஆயுதமொன்றால் மற்றைய மாணவனை தாக்கியுள்ளார்.

மோதலில் காயமடைந்த மாணவன், சியம்பலாண்டுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகலை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான மாணவன், இன்னும் சில மாணவர்களுடன் இணைந்து தாக்குதலை மேற்கொண்ட மாணவனை பகடி செய்துள்ளார்.

இதனால், கோபமடைந்த மாணவன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்யை தினம் பாடசாலை நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பியபோது, இந்த தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சியம்பலாண்டுவை நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

 

0
Shares