மூன்று நாட்டு தலைவர்களும் ஓர் இடத்தில்

பல்கேரியா, சோர்பியாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சுவார்த்தை ஒன்று இன்று ஆரம்பமாகியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron , ஜேர்மனிய பிரதமர் Angela Merkel மற்றும் பிரித்தானிய பிரதமர் Theresa May ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக பல்கேரியாவில் ஒன்று கூடியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக மேற்கு பல்கேரிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக இணைத்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதனூடாக பல்கேரியா நாடுகளில் சீனா மற்றும் ரஷ்யாவின் செல்வாக்கினை குறைக்கமுடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பிலான உயர் மட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காகவே இந்த மூன்று நாட்டு தலைவர்களும் ஒன்றுகூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை பல்கேரியாவின் சோர்பியாவில் இன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0
Shares