Mumbai Indians அணி 03 ஓட்டங்களால் வெற்றி

ஐ.பி.எல் தொடரின் 50வது போட்டியில் Mumbai Indians அணி 03 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

Mumbai Indians மற்றும் Kings XI Punjab அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Kings XI Punjab அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய  Mumbai Indians அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 187 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் இறங்கிய Kings XI Punjab அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து இழப்பிற்கு 183 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இதேவேளை, இன்றைய தினம் இடம்பெறவுள்ள 51ஆவது போட்டியில் Royal Challengers Bangalore அணியும், Sunrisers Hyderabad அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

 

 

 

0
Shares