ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நாளை மறுதினம் கூடவுள்ளது

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நாளை மறுதினம் அவசரமாக கூடவுள்ளது.

பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையில் காஸாவில் இடம்பெறும் மோதல்கள் குறித்து விவாதிப்பதற்காகவே இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலியர்களின் தாக்குதலுக்கு கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும்; என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமையவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நாளை மறுதினம் கூடவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 

0
Shares