merry christmas

happy

கோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்கவுள்ள 16 பேர்

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்க உள்ளது.

அத்துடன், இந்த சந்திப்பானது நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் எதிர்வரும் புதன்கிழமை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒருவர் என்பதால் அவரை 16 பேர் கொண்ட அணி சந்திக்கவுள்ளதாகவும் எஸ்.பி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

0
Shares