merry christmas

happy

சிறுவர்களுக்கான வைத்தியசாலையொன்று களுத்துறை வைத்தியசாலை வளாகத்தில்

நெதர்லாந்து நாட்டின் நிதியுதவியின் கீழ், பூரண வசதிகளைக்கொண்ட சிறுவர்களுக்கான வைத்தியசாலையொன்று களுத்துறை வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.

வைத்தியசாலையை அமைக்கும் இந்த திட்டத்திற்காக நான்காயிரத்து 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

களுத்துறை வைத்தியசாலையின் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 11 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூரண வசதிகளைக் கொண்ட கண் வைத்தியசாலை ஒன்றும் இங்கு எதிர்காலத்தில் அமைக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

0
Shares