வரலாற்று சிறப்பு மிக்க ஓர் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆகிய இருவரதும் சந்திப்பு இன்று காலை இடம்பெற்று வருகின்றது.

சுமார் 45 நிமிடங்கள் அமையப் பெற்ற இந்த சந்திப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பாக அமைந்துள்ளதோடு சிங்கப்பூரில் செண்டோசா தீவில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது..

அணுவாயுத சோதனையை நிறுத்துதல் மற்றும் வடகொரியா மீதான தடைகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பிற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 ஊடகவியலார்கள் சிங்கப்பூர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

0
Shares