இளைய தளபதி விஜய் இப்படிப்பட்ட மனிதரா ! – நடன இயக்குனர் வெளியிட்ட அசரவைக்கும் தகவல்

இளைய தளபதி விஜய் என்றால் ரசிகர்கள் மனதில் முதலில் தோன்றுவது அவருடைய நடனம் தான். தற்போது பிரபல நடன இயக்குனர் ஷெரிப் தெறி படத்தில் பணியாற்றியபோது விஜய்க்கு நடந்த சம்பவம் பற்றி பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

“அன்று விஜய்க்கு கால் அசைக்கவே முடியாத அளவுக்கு காலில் சுளுக்கு பிடித்திருந்ததாம்.ஆனால் அவரோ அதை யாரிடமும் கூறாமல் ராங்கு பாடலில் தொடர்ந்து நடனமாடியுள்ளார் . அவர் Final step ஆடியதை பார்த்து எனக்கே ஒரு Vibration வந்தது.”

மேலும் “நடன பின்னனியில் இருந்து விஜய் வரவில்லை என்றாலும் அவர் எப்போதுமே அடுத்தவர்கள் ஆடுவதை பார்த்து உணர்ந்துகொள்வார். அப்படியே கேமரா முன்பும் ஆடிவிடுவார். அவருக்கு எல்லாமே தெரியும். அவரை தனியாக விட்டால் கூட நூறு படங்களிற்கு கூட நடன இயக்குனராக பணியாற்றிவிடுவார். அவருக்கு அவ்வளவு திறமை உள்ளது” என்று நடன இயக்குனர் ஷெரிப் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

0
Shares