என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் இவர்தானா !

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் உருவாகி வந்தது. இந்த திரைப்பபடம் வெளிவருமா என்ற விபரம் அவர்களுக்கே தெரியாத அளவுக்கு தான் இப்படத்தின் அப்டேட் உள்ளது.

இந்நிலையில் தனுஷ் அண்மையில் பேட்டியொன்றின் போது இப்படத்தை நிச்சயமாக வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.

இத்திரைப்படத்தில் வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர் ஒருவர் நடித்துள்ளதாக அறியப்படுகின்றது.முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் சமுத்திரக்கனியிடம் தான் பேச்சு வார்த்தை நடந்ததாம்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக இயக்குனர் கௌதம் மேனன் கூறியுள்ளார்.

0
Shares