என்னுடைய மாமியாருக்கு சாந்தனு நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்று ஆசையிருக்கிறது

திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.கணவர் சாந்தனுவுடன் இணைந்து நடிக்கலாமே என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.அது போன்று சில வாய்ப்புகளும் வந்தன.ஆனால் கதை வலுவாக இல்லை.கதையும் கரெக்டரும் நன்றாக இருந்தால் நடிப்பேன் என்று ஆச்சரியப்படவைத்தார் நடிகை திருமதி கீர்த்தி சாந்தனு.

அவரிடம் உங்களைத் தவிர சாந்தனுவிற்கு ஜோடியாக யார் நடித்தால் நன்றாக இருப்பார்? என்று கேட்ட போது, சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும்.ஆனால் என்னுடைய மாமியாருக்கு சாந்தனு நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்று ஆசையிருக்கிறது.

அது விரைவில் நடைபெறவேண்டும் என்று நானும் பிரார்த்திக்கிறேன் என்றார் கீர்த்தி.தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டபோது,தொலைக்காட்சிகளில் புதுமையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவேண்டும் என்ற எண்ணமிருக்கிறது.அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்கிறார் நடிகை கீர்த்தி.

0
Shares